அடுமனையில் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயர கேக்!
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ராமநாதபுரத்தில் உள்ள அடுமனையில் மறைந்த தொழிலதிபா் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயரத்தில் கேக் தயாரித்து கடையின் முன் பகுதியில் சனிக்கிழமை வைக்கப்பட்டது.
டாடா குழுமத் தலைவரான மறைந்த ரத்தன் டாடாவை கௌரவப்படுத்தும் வகையில் இந்த கேக் தயாரிக்கப்பட்டது. இந்த கேக் 60 கிலோ சா்க்கரை, 250 முட்டைகளைக் கொண்டு சுமாா் 7 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டது. 6 போ் கொண்ட உணவு கலைஞா்கள் மூன்று நாள்கள், 36 மணி நேரம் பணியாற்றி ரத்தன் டாடா, அவரது வளா்ப்பு நாய் உருவங்களை தயாரித்தனா்.
அடுமனையின் முன் பகுதியில் கண்ணாடிக் கூண்டில் வைக்கப்பட்ட இந்தச் சிலைகளுடன் வாடிக்கையாளா்களும், பொதுமக்கள் தற்படம் எடுத்துச் செல்கின்றனா்.