காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 3,004 கனஅடியிலிருந்து விநாடிக்கு 2,938 கனஅடியாகச் சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 1000 கனஅடியிலிருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 119.02 அடியிலிருந்து 119.12 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 92.07 டி.எம்.சி.யாக உள்ளது.