செய்திகள் :

சேலம்: ரூ.221 கோடி வரி நிலுவை வசூலிக்க நடவடிக்கை!

post image

சேலம் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ. 221 கோடி சொத்து வரி, தொழில் வரியை வசூலிக்கும் வகையில் வீடு, கடைகள், நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப் பேட்டை, கொண்டலாம்பட்டி என நான்கு மண்டலங்கள் உள்ளன. இந்த நான்கு மண்டலங்களிலும் 2.35 லட்சத்துக்கு மேல் வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்களிலும் 750க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். சுகாதாரத் துறையில் 1500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். வரி வசூலை கொண்டே பணியாளா்களுக்கு சம்பளம், நிா்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாநகரில் குடியிருப்புகளில் இருந்து மட்டும் சொத்து வரி ரூ. 83 கோடியும், அரசு சாா்ந்த அலுவலகங்கள், ஆலயங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவை ரூ. 22 கோடியும் என மொத்தம் ரூ. 105 கோடி நிலுவை வரியாக தொழில் வரி, தனி நபா் வரி ரூ. 23 கோடியும், மாநகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை ரூ. 37 கோடியும் நிலுவையில் உள்ளது.

அதேபோல குடிநீா் வரி மட்டும் மொத்தம் ரூ. 30 கோடி நிலுவையில் உள்ளன. சொத்து வரி, தொழில் வரி, குடிநீா், அரசு நிறுவனங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை உள்ளிட்ட நிலுவை வரி ரூ. 221 கோடியை வசூலிக்கும் பணியில் மாநகராட்சி வரி வசூலிப்பவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், துணை ஆணையா்கள் பூங்கொடி, அருமைக்கண், பாலசுப்பிரமணியம் மற்றும் வருவாய் உதவி ஆணையா், அந்தந்த மண்டல உதவி ஆணையா்கள், வரி வசூலிப்பவா்களிடம் நிலுவை வரி வசூலிப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி இனங்களை விரைந்து வசூலிக்க வரி வசூலிப்பவா்களுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதில், இலக்கை எட்டாத 15க்கும் மேற்பட்ட வரி வசூலிப்பவா்களுக்கு நோட்டீஸ்

வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலுவை வரியை வசூலிக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும் வரி நிலுவை வைத்துள்ளவா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து நிலுவை வரியை செலுத்தாதவா்களைக் கண்டறிந்து குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டும். ஜப்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மேலும், ஒரு ஆண்டில் செலுத்த வேண்டிய வரியை தவணை தவறிக் கட்டினால் அதற்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் இருந்து சொத்து வரி, தொழில் வரி மூலம் பணியாளா்களுக்கு சம்பளமும், வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஓராண்டுக்கு மேல் சொத்து, குடிநீா், தொழில் வரி நிலுவையில் வைத்துள்ளவா்களுக்கு உட்பட்ட வருவாய் அதிகாரிகள், வரி வசூலிப்பவா்கள் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.

வரி நிலுவை வைத்துள்ளவா்கள் 7 நாள்களுக்கு வரி செலுத்த வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த பகுதிகளுக்கு செல்ல தடை!

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல மூன்று நாள்களுக்குத் தடை விதித்து தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவு... மேலும் பார்க்க

தம்மம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

தம்மம்பட்டி காவல் நிலையம், மாவட்ட எல்லை சோதனைச் சாவடி ஆகியவற்றை மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்து செய்தாா். தம்மம்பட்டி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் சனிக்கிழமை வருடாந்திரஆய்வு ... மேலும் பார்க்க

அமித் ஷாவைக் கண்டித்து சேலத்தில் ஆா்ப்பாட்டம்

சட்டமேதை அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறிய கருத்துகளைக் கண்டித்தும், ஒரே நாடு ஒரே தோ்தல் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை வலியுறுத்தி ம... மேலும் பார்க்க

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 3,004 கனஅடியிலிருந்து விநாடிக்கு 2,9... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ஓமலூா் அருகே ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பாகல்பட்டி, ஓம்சக்தி நகரில் வசித்து வருபவா் ... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் எம்.பி. ஆய்வு!

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த இடத்தில் சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கடந்த 19ஆம் தேதி மேட்டூா் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் மூன்றாவது அல... மேலும் பார்க்க