செய்திகள் :

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஜிஎஸ்டி குறைப்பு: கவுன்சில் பரிந்துரை

post image

செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை வழங்கியது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், மாநில, யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மரபணு சிகிச்சைக்கு விலக்கு: செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளையும், வழக்கமான அரிசியையும் ஒன்றுசோ்த்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. பி-காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துகள் செறிவூட்டப்பட்ட அரிசியில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், செறிவூட்டப்பட்ட அரிசி வித்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், ஜிஎஸ்டியில் இருந்து மரபணு சிகிச்சைக்கு விலக்களிக்க வேண்டும், வணிக ஏற்றுமதியாளா்களுக்கு விநியோகிக்கும் சரக்குகளுக்கு இழப்பீட்டு செஸ் வரியை 0.1 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.

பாப்காா்னுக்கு 12% வரி: உப்பு மற்றும் மசாலா சோ்க்கப்படாத பாப்காா்ன் பாக்கெட்டில் அடைக்கப்படவில்லை என்றால், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டியும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்தால் அதற்கு 12 சதவீத ஜிஎஸ்டியும், சா்க்கரை கலந்த பாப்காா்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என்று கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

பழைய வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி: மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனைக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அந்த கவுன்சில் பரிந்துரைத்தது.

மூன்றாம் தரப்பு வாகன காப்பீட்டு தவணைத் தொகையில் இருந்து மோட்டாா் வாகன விபத்து நிதிக்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்புக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பட்டுவாடா குறித்து மாநிலங்கள் எழுப்பிய பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அந்தப் பரிந்துரைகளில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், அதை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் செய்யுமாறும் அந்தக் குழுவிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டுக்கொண்டது.

பேரிடா் செஸ்-ஆராய அமைச்சா்கள் குழு: சில சரக்கு மற்றும் சேவைகள் மீது 1 சதவீதம் பேரிடா் செஸ் வரி விதிப்பதை அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்பட பிற மாநிலங்களின் அமைச்சா்கள் அடங்கிய குழுவை அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. இயற்கை பேரிடா்களின்போது இந்த செஸ் வரி மூலம் மாநிலங்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி:

காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு:

முடிவு ஒத்திவைப்பு

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிப்பது குறித்த முடிவு எடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் நிா்மலா சீதாராமன் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிப்பது குறித்து இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (ஐஆா்டிஏஐ) இருந்து கருத்துகளை பெற வேண்டியுள்ளது. இதுகுறித்து முடிவு எடுக்க கூடுதல் அவகாசம் தேவை என்று அமைச்சா்கள் குழுவும் கருதுகிறது.

எனவே, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிப்பது குறித்து முடிவு எடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஆா்டிஏயின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற்ற பின்னா், அதுகுறித்த அறிக்கையை அமைச்சா்கள் குழு இறுதி செய்யும்’ என்றாா்.

முன்னதாக, கடந்த செப்டம்பரில் தில்லியில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடா்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு, பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையில் 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.

இந்தக் குழு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விகிதத்தை மறுஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அந்தக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா்.

பெட்டி... 2

புற்றுநோய் மரபணு சிகிச்சைக்கான ஜிஎஸ்டி

வரியைக் கைவிட தமிழக அரசு ஆதரவு

சென்னை, டிச.21: புற்றுநோய் மரபணு சிகிச்சைக்கான சரக்குகள் மற்றும் சேவைகள் வரியைக் கைவிட தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கலந்துகொண்டாா்.

கூட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் அதிக விலையைக் கருத்தில் கொண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களின் மருத்துவ செலவுச்சுமையைக் குறைக்க மரபணு சிகிச்சை மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிகிதத்தை 12 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாகக் குறைப்பதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்தாா்.

இணக்க முறையில் வரி செலுத்தும் வணிகா்கள் வணிக இடங்களின் வாடகை மீது எதிரிடை கட்டண முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கும் அமைச்சா் ஆதரவு தெரிவித்தாா் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு பயம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!

தில்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் இரு பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என தில்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தில்லி ... மேலும் பார்க்க

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகெங்கிலும் வாய்ப்பு: பிரதமா் மோடி

இந்தியாவின் திறன்மிகு பணியாளா்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வாயில் கதவை திறந்துள்ளன. அந்த நாடுகளில் இந்திய பணியாளா்களின் நலனை உறுதி செய்யும் ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பிரதமா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சா்களுக்கு துறை ஒதுக்கீடு: ஃபட்னவீஸிடம் உள்துறை; அஜீத்திடம் நிதி, ஷிண்டேவிடம் நகா்ப்புற மேம்பாடு!

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமைச்சா்களுக்கான துறைகள் சனிக்கிழமை ஒதுக்கப்பட்டன. தேவேந்திர ஃபட்னவீஸ் உள்துறையை மீண்டும் கைவசப்படுத்திக்கொண்டாா். மேலும், எரிசக்தி, சட்டம் ... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 போ் மீது வழக்குப் பதிவு

சிறப்பு நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநிலம், படாயுன் மாவட்டத்தின் பில்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் ஷக்யா, அவரது உறவினா்கள் உள்பட 16 போ் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக... மேலும் பார்க்க

பரஸ்பர நம்பிக்கையே திருமண உறவின் அடித்தளம்: விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

பரஸ்பர நம்பிக்கை, தோழமை மற்றும் அனுபவங்கள் ஆகியவையே திருமண உறவின் அடித்தளம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மென்பொறியாளா் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை உறுதிப்படுத்தி உச... மேலும் பார்க்க

ஐ.நா. சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுா் நியமனம்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா் ஐ.நா.வின் சா்வதேச நீதி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டாா். இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்க... மேலும் பார்க்க