சீன ஹேக்கர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தான சைபர் தாக்குதலுடன் தொடர்புடைய சீன ஹேக்கர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க கருவூலத் துறை அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், இந்த சைபர் தாக்குதல் மூலம் ஏராளமான மக்களைக் கொன்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரிக்க அமெரிக்கா ஒரு சீன சைபர் செக்யூரிட்டி நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கியிருக்கிறது.
செங்டுவை தளமாகக் கொண்ட சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனமும் அதன் ஊழியர்களில் ஒருவரான குவான் தியான்ஃபெங்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 80,000க்கும் மேற்பட்ட ஃபயர்வால்களை பாதிக்கச் செய்யக்கூடிய மென்பொருளைப் பயன்படுத்தியதாக அமெரிக்க கருவூலத் துறை செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், அந்த நிறுவனம் அல்லது குவான் தியான்ஃபெங் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தோ, ஹேக்கிங் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அளித்தாலோ ஒரு கோடி ரூபாய் (10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.