கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
முதல்வா் நாளை குமரி வருகை: மாவட்ட திமுக செயலா் அறிக்கை
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திங்கள்கிழமை (டிச.30) காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குள்பட்ட மகாதானபுரம் ரவுண்டானாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியிலும், கண்ணாடி இழை கூண்டு பாலம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட கழக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளாா்.