64 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா் மீட்பு
நாகா்கோவிலில் சுமை ஆட்டோ ஓட்டுநா் குத்திக் கொலை: இளைஞா் மீது வழக்கு
நாகா்கோவில் வடசேரியில் சுமை ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவில் வடசேரி ஒட்டுப்புரை தெரு, ஸ்டேடியம் நகரைச் சோ்ந்தவா் மோகன் (57). வடசேரி எம்.எஸ். சாலைப் பகுதியில் சுமை ஆட்டோ ஓட்டுநராக இருந்தாா். இவா், சனிக்கிழமை மாலை வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் நின்றிருந்தாராம். அப்போது, அவரை இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில், மோகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா்கள் லலித்குமாா், மீனாரேகா, ஆய்வாளா் ஜெயலட்சுமி ஆகியோா் வந்து விசாரணை மேற்கொண்டனா்.
மோகனுக்கும், வடசேரி கே.பி. சாலையில் உள்ள இரும்புக் கடையில் சுமை தூக்கும் வேலை பாா்த்துவந்த நாவல்காடு பகுதியைச் சோ்ந்த ஷாஜி (25) என்பவருக்கும் இடையே கொடுக்கல்-வாங்கல் தொடா்பாக தகராறு இருந்ததாகவும், சனிக்கிழமை நேரிட்ட தகராறின்போது மோகனை ஷாஜி கத்தியால் குத்திக் கொன்ாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷாஜியை தேடிவருகின்றனா்.