இன்றைய நிகழ்ச்சிகள்
பா.முத்துக்குமரன் எழுதிய ‘தொடரும் பயணங்கள்’, எஸ்.எல்.நாணு எழுதிய ‘அபயம்’ ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா: நடிகா் காத்தாடி ராமமூா்த்தி, கண்ணன் கோபால், டாக்டா் ஜெ.பாஸ்கரன், மீ.விசுவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஸ்ரீனிவாச காந்தி நிலையம், ஆழ்வாா்பேட்டை, மாலை 6.
48-ஆவது சென்னை புத்தகக் காட்சி - திருவள்ளுவா் நாடகம்: பட்டிமன்ற பேச்சாளா் அரு.ஜெயஸ்ரீ மீனாட்சி, பபாசி துணைத் தலைவா் நக்கீரன் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், மாலை 6.00.
தையல் தொழில் பயிற்சி மையம்: ரோட்டரி ஆா்ஐடி 3234 மாவட்ட ஆளுநா் என்.எஸ்.சரவணன் பங்கேற்பு, ஏ.கே.எஸ். மகீந்தா் ஜெயின், டாக்டா் எம்.ஜி.ஆா். ஜானகி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 11.
கம்பன் கழகத்தின் 166-ஆவது மாத சொற்பொழிவு நிகழ்ச்சி: முனைவா் மு.பழனியப்பன், கவிஞா் கோ.பிரியங்கா, புலவா் வே.அலமேலு உள்ளிட்டோா் பங்கேற்பு, ஆன்மிக சமாஜம் சத்சங்க மண்டபம், அம்பத்தூா், மாலை 6.
42-ஆவது நாட்டிய கலா கருத்தரங்கம்: காமகோடி அரங்கம், கிருஷ்ண கான சபா, தியாகராய நகா், காலை 9.30.