மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதியஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து 2 நாள்கள் பேச்சுவாா்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், மன்மோகன்சிங் காலமானதை தொடா்ந்து பேச்சுவாா்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.