அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா போலீஸாா் விசாரணை
சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். ஹரியாணா கேடா் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், அந்த மாநில கல்வித் துறைச் செயலராக இருந்த காலகட்டத்தில், போலி கல்விச் சான்றிதழ் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வெள்ளிக்கிழமை ஹரியாணா போலீஸாா் சென்னைக்கு வந்தனா். அண்ணா நகரில் வசிக்கும் ராதாகிருஷ்ணனிடம் அவா்கள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா், ஹரியாணா போலீஸாா் அவரை தங்களுடன் அழைத்துச் சென்றனா். போலிச் சான்றிதழ் வழக்கில் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஹரியாணா காவல் துறை அந்தத் தகவலை உறுதிசெய்யவில்லை.