அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கு: தாய் கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயதுக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் - திவ்யா தம்பதிக்கு 4 வயதில் லக்சன் குமாா் என்ற மகனும், ஒன்றரை வயதில் புனித்குமாா் என்ற மகனும் இருந்தனா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு திவ்யா, தனது இரு குழந்தைகளுடன் கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3-ஆவது தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
மன அழுத்தத்தில் சிக்கித் தவித்த திவ்யா, கடந்த 21-ஆம் தேதி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருக்கும்போது, கழிப்பறையில் வைத்து தனது ஒன்றரை வயதுக் குழந்தை புனித்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தாா். பின்னா், 4 வயது மகன் லக்சன் குமாரின் கழுத்தையும் அறுத்து, திவ்யாவும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டாா்.
லக்சன் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவா்கள், திவ்யா, லக்சன்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குழந்தை புனித்குமாா் சடலத்தை போலீஸாா் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இதற்கிடையே மருத்துவமனையில் திவ்யாவின் உடல்நிலை தேறியதால், அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.