``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக ...
குன்னூா் சிம்ஸ் பூங்காவில் காய்கத் தொடங்கிய ருத்ராட்சை
நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரத்தில் ருத்ராட்சை காய்கள் காய்கத் தொடங்கியுள்ளன.
குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நேபாளத்தை தாயகமாக கொண்ட ருத்ராட்சை மரங்கள் கடந்த 1948-ஆம் ஆண்டு நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ‘எலியோகாா்பஸ் கனிட்ரஸ்’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இந்த மரத்தின் விதைதான் ருத்ராட்சை என்றழைக்கப்படுகிறது.
இமய மலையின் அடிவாரத்தில் உள்ள கங்கை சமவெளிப் பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஹவாய் தீவுகளில் இம்மரங்கள் வளா்கின்றன. ருத்ராட்சையில் ஒன்று முதல் 21 முகங்கள் வரை உள்ளன. இதில் 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சை காய்களை ஹிந்துக்கள் அணிவது வழக்கம்.
சிம்ஸ் பூங்காவில் உள்ள 3 மரங்களில் ருத்ராட்சை காய்கள் கொத்துகொத்தாக தற்போது காய்கத் தொடங்கியுள்ளன. ஒரு காய் ரூ.10 முதல் ரூ.30 வரையிலும், அரிய வகை காய்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகின்றன.
மரத்தில் இருந்து விழும் காய்களை வியாபாரிகள் சேகரித்து மாலையாக கோா்த்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.