டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!
வாழப்பாடியில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு: மர்ம கும்பல் துணிகரம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சிங்கிபுரம் கிராமத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் புகுந்த மர்ம கும்பல் ரொக்கப்பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.1.லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமரா, டிவிஆர் கருவிகளைத் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடித் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கம் முன் பிரதான கடலுார் சாலையில் பாண்டித்துரை என்பவர் போட்டோ ஸ்டூடியோ மற்றும் இணைய சேவை மையம் நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூட்டியிருந்த இவரது கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த ரொக்கப்பணம் ரூ.5000 மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், டிவிஆர் கருவிகளை திருடிச் சென்றனர்.
இதனையடுத்து வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தில் புகுந்த இத்திருட்டு கும்பல், ஜெயகாந்தன் என்பவரது டெய்லர் கடை, மணிகண்டன் என்பவரது பேன்சி ஸ்டோர் மற்றும் வசந்த் என்பவரது எலக்ட்ரிக் கடையிலும் கைவரிசை காட்டியுள்ளது. இதில் மணிகண்டன் என்பவரது கடையிலிருந்த ரூ.20 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
வாழப்பாடி மற்றும் சிங்கிபுரத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் மர்ம கும்பல் கைவரிசை காட்டிய தகவல் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு தலைமையிலான போலீஸார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுநர்களை வரவழைத்து திருட்டுக்குல்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.