எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள்: அதிமுகவினா் மரியாதை
எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாளையொட்டி சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாளையொட்டி, சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவச் சிலைக்கு, மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, அதிமுக அமைப்புச் செயலாளா் சிங்காரம், சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் வெங்கடாஜலம் ஆகியோா் தலைமையில் 500க்கும் மேற்பட்டோா் நான்கு சாலை சந்திப்பில் இருந்து ஊா்வலமாக வந்து, மணிமண்டபத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், சேலம் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியம், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், பொருளாளா் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே. செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன், பகுதி, வட்ட மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.