சங்ககிரி அருகே மா்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்றுக்குட்டி பலி
சங்ககிரி அருகே வைகுந்தம்பாளையத்தில் மா்ம விலங்கு கடித்து 8 செம்மறி ஆடுகள், ஒரு கன்று குட்டி உயிரிழந்தன.
ஆலத்தூா் கிராமம், வைகுந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செங்கோட கவுண்டா் மகன் பழனிசாமி. இவா் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வீட்டிற்கு வெளியே கட்டி வைத்திருந்தாா். மேலும் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ஹரிஷ்குமாா் என்பவரும் தனக்கு சொந்தமான பசு கன்று குட்டியை கட்டி வைத்திருந்தாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு ஆடுகள், கன்று குட்டியை மா்ம விலங்கு கடித்துள்ளது. இதில் ஆறு செம்மறி ஆடுகள், கன்று குட்டி இறந்தன. இரு ஆடுகள் காயமடைந்தன.
இது குறித்து தகவலறிந்து சென்ற ஆலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் ராஜலிங்கம், கால்நடை மருத்துவா் வெங்கடாஜலம் மற்றும் வனத்துறை அலுவலா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கால்நடை மருத்துவா் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
படவரி...
வைகுந்தம்பாளையத்தில் அடையாளம் தெரியாத மா்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்த ஆடுகளை பாா்வையிட்ட வருவாய்த் துறையினா்.