செய்திகள் :

மதுரை, திருச்சியில் அமையும் டைடல் பூங்கா பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

post image

மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையின் போது, திருச்சி மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்சியில், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த டைடல் பூங்காவானது, 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் தரைத் தளம் மற்றும் 6 தளங்களுடன் அமையவுள்ளது.

மேலும் 18 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்காவில் 5000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய டைடல் பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.289 கோடியில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க |விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில், மதுரை மற்றும் திருச்சியில் அமையும் புதிய டைடல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் அமைய உள்ள டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு க... மேலும் பார்க்க

பன்னாட்டு புத்தகக் காட்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின்!

பன்னாட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யு என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு மேல் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ... மேலும் பார்க்க

மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக சட்டத்துறையின் 3ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை(ஜன.1... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் மனு ஏற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில் 58 வேட்பாளா்கள் 65 மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதா... மேலும் பார்க்க

மரணத்திலிருந்து தப்பினோம்.. ஷேக் ஹசீனா பரபரப்புத் தகவல்

வெறும் 20 - 25 நிமிட இடைவெளி தாமதமாகியிருந்தாலும் கொல்லப்பட்டிருப்போம், மரணத்திலிருந்து தப்பிவந்தோம் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்திருக்கும் ஆடியோ ஒன்றை வங்கதேச அவாமி லீக் கட்சி த... மேலும் பார்க்க