செய்திகள் :

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும்: சிவராஜ் சிங் சௌஹான்

post image

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜகவின் உள்கட்சித் தேர்தல் பொறுப்பாளருமான சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகத்தில் புதிய பாஜக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் விவேக் ராமசுவாமி!

விரைவில் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும். பூத் அளவிலான தலைவர்களுக்கான தேர்தலையும் நடத்துகிறோம்.

சில சமயங்களில் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தற்போது கர்நாடக மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா பதவி வகித்து வருகிறார்.

இவர் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவின் மகன் ஆவார்.

இதனிடையே விஜயேந்திராவுக்கு பாஜக தலைவர்களில் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு: சஞ்சய் ராய் கூச்சல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.தீர்ப்பை வாசித்தபோது, எப்போதும் போல அப்பாவ... மேலும் பார்க்க

நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி

நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி,... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் திட்டங்களை நகலெடுக்கும் பாஜக: பிரியங்கா கக்கர்

தில்லி தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மியின் திட்டங்களை பாஜக நகலெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் குற்றம் சாட்டியுள்ளார்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தலைநகர் தில்லியில... மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய... மேலும் பார்க்க

திருப்பதி அருகே திரையரங்கில் பலியிடப்பட்ட ஆடு! பிரபல நடிகரின் ரசிகர்கள் கைது!

டாகு மகாராஜ் வெளியீட்டின்போது, திரையரங்குக்கு வெளியே ஆட்டை பலிகொடுத்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் த... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. இலவச மின்சாரம், குடிநீர்.. வாடகைதாரர்களுக்கும்!

தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழ... மேலும் பார்க்க