கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
BB Tamil 8 : `இந்த வீட்டை விட்டு...'- எமோஷனலாக பேசிய முத்துக்குமரன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 104- வது நாளுக்கான ( ஜனவரி 18) புரோமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 6 -ம் தேதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. இம்முறை விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில் முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, விஷால் ஆகிய 5 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். இந்நிலையில், பிக் பாஸ் க்ராண்ட் பின்னாலே (Bigg Boss Tamil Season 8 Grand Finale) நாளை 18 ஜனவரி 2025 அன்று நடக்கிறது.
இதனை முன்னிட்டு போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்திற்கு தயாராகி உள்ளனர். நாளையுடன் நிகழ்ச்சி முடிவடைவதால் போட்டியாளர்கள் மிகவும் எமோஷனலாக இருகின்றனர். இதுதொடர்பான காட்சிகள் இரண்டாவது புரோமோவில் இடம் பெற்றிருக்கிறது. "இந்த வீட்டை விட்டு நம்ம எல்லாரும் வெளிய போகலாம். ஆனா நமக்குன்னு நம்ம எல்லார் நெஞ்சுக்குள்ளையும் ஒரு கூடு இருக்கு. என்னைக்குமே அந்த கூட்டுக்குள்ள நம்ம எல்லோரும் ஒன்றாக இருப்போம்" என்று முத்து எமோஷனலாகப் பேசியிருக்கிறார். 'இந்த நிகழ்ச்சி என்பது வெறும் நிகழ்ச்சி மட்டும் அல்ல. அது ஒரு எமோஷன்' என்று பிக் பாஸ் கூறுகிறார்.