கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும்: சிவராஜ் சிங் சௌஹான்
BB Tamil 8 : இறுதி கட்டத்தில் பிக் பாஸ்... `நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன்’ - நெகிழ்ந்த முத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 104- வது நாளுக்கான ( ஜனவரி 18) முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 6 -ம் தேதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. இம்முறை விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில் முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, விஷால் ஆகிய 5 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். இந்நிலையில், பிக் பாஸ் க்ராண்ட் பின்னாலே (Bigg Boss Tamil Season 8 Grand Finale) நாளை 18 ஜனவரி 2025 அன்று நடக்கிறது.
இதனை முன்னிட்டு போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்திற்கு தயாராகி உள்ளனர். இதுதொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் 'ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்' என்று விஜய் சேதுபதி சொல்கிறார். 'இந்த ஸ்டேஜ்ல என்னுடைய பயணம் தொடரும்னு நினைக்கிறேன்' என்று ராயன் சொல்ல 'மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன் பிக் பாஸ்' என்று முத்துக்குமரன் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.