செய்திகள் :

தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை: அன்புமணி குற்றச்சாட்டு

post image

பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்து தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

தமிழ்நாட்டை ஆள்பவர்களோ, தமிழ்நாட்டில் ஒருவர் கூட மது குடிக்காதவர்களாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மது வணிகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம் ரூ.47 கோடி அதிகரித்திருக்கிறது என்பதன் மூலம் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை ஆகும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஒரு புறம் போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது; தீமை என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்கலாமா? என்று ஒரு புறம் தொலைக்காட்சி விளம்பரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார். இத்தகைய இரட்டை வேடத்தை மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு எவராலும் நடிக்க முடியாது.

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி இடத்தில் இருக்கின்றன. அந்த மாவட்டங்களை கல்வியில் உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அந்த மாவட்டங்களை மதுவில் மூழ்கடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன. அதனால் தமிழ்நாடு சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி

நாட்டையே உலுக்கிய மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவி... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதையொட்டி ஜன. 20, 22, 24,26 ஆகிய தேதிகளில் சென்னை காமராஜர் சாலை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணியில் இணைய விஜய்-க்கு அழைப்பு!

இந்துத்துவா சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'பரந்தூர்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாள்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்ட நிலையில் இன்று(வெள்ளிக... மேலும் பார்க்க

திருவையாறில் ஸ்ரீ தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழாவின் கடைசி நாளான இன்று பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண... மேலும் பார்க்க

நெல்வாய் வன்முறைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை: திருமாவளன்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து... மேலும் பார்க்க