செய்திகள் :

ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள்! ஜோதிடம் கூறுவது என்ன?

post image

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் ஜனவரி 21-ஆம் தேதி நிகழவிருக்கிறது. இது பிப்ரவரி வரை வானில் தெரியும்.

பொதுவாக இந்த கிரகங்களின் அணிவகுப்புக்கும், ஜாதகத்துக்கும், ராசிக்காரர்களுக்கும் எந்தவிதமான மாற்றங்கள் நேரிடும் என்பதை, ஜோதிடர்கள்தான் துல்லியமாகக் கணிக்க வேண்டியது இருக்கும்.

பொதுவாக, இதுபோன்ற அபூர்வமான நிகழ்வுகளின்போது, ஜோதிடர்கள் சொல்வது என்னவென்றால், கோள்களின் சக்தி அதிகரித்து காணப்படும்போது, மக்கள் தங்களது வாழ்நாள் இலக்குகளை அடைய தீவிரமாக செயல்படலாம். இலக்குகள் இல்லாதவர்கள் தங்களுக்கான வாழ்வியல் இலக்குகளை தீர்மானிக்கலாம்.

தியானம் செய்வது, ஆன்மிக நடைமுறைகளைப் பின்பற்றுவது, நல்ல ஊக்கமளிக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோள்கள் மேற்கொள்ளும் நகர்வும், மனிதர்களின் ராசிகளுக்கு இருக்கும் நேரடித் தொடர்பையும் ஜோதிடர்கள் இந்தக் காலக்கட்டத்தில் நன்கு ஆராய்வதற்கான வாய்ப்பாகவும் இது உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது வெறும் பார்ப்பதற்கு அபூர்வமான நிகழ்வாக மட்டுமல்லாமல், ஆன்மிக வளர்ச்சிக்கும், மனிதர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளவும் ஏற்ற நிகழ்வாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிக்க.. வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களின் அணிவகுப்பு! ஜன. 21-ல் கண்கொள்ளா காட்சி

இது வெறும் வானியல் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வு மட்டுமல்ல என்றும், கோள்களின் நகர்வுகளைக் கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திலும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

பொதுவாக ஜோதிடத்தில், கோள்களின் மாற்றம், இடம்பெயர்வு, அது அமரும் இடம், அங்கிருந்து எந்த இடத்தைப் பார்க்கிறது என்பவற்றைக் கொண்டு, பலாபலன்கள் கணிக்கப்படுகிறது. இந்த அணிவகுப்பில் இடம்பெறவிருக்கும் ஏழு கோள்களும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றின் நகர்வுகளுக்கு ஏற்ப விளைவுகள் நிகழ்கின்றன. ஒரு கோள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகரும் போது, அதற்கேற்ப வாய்ப்புகள், மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது.

வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் மற்றும் புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசய நிகழ்வானது ஜனவரி 21 ஆம் தேதி நிகழவிருக்கிறது. ஏழு கோள்கள் ஒரே டிகிரிக்குள் வருவதால், அவை ஒன்றாக தெரியும். இந்நிகழ்வை நம்மால் காண முடியும் என்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

இவ்வாறு ஏழு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நின்று, இரவு நேரத்தில் வானத்தில் ஓர் அழகிய அரை வட்டத்தை உருவாக்கிக் காண்பவர்களின் நினைவில் நீங்கா ஒரு அனுபவமாக இடம்பிடிக்கவிருக்கிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நடக்கப்போவதில்லை.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நிலவுக்கு அருகே வெள்ளிக் கோளானது வருகிறது, ஜனவரி 13 ஆம் தேதி பௌர்ணமி நாளிலிருந்து செவ்வாய் கோளானது நெருங்கியுள்ளது.

இந்த நிலையில்தான், வெள்ளியும், சனிக் கோளும் இதுவரை இல்லாத வகையில் நெருக்கமாக வந்துகொண்டிருக்கின்றன. இவை ஜனவரி 18 ஆம் தேதி முதல் மிக அருகருகே நேர்க்கோட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, ஜன. 18 முதல், மாலை வேளைகளில், இவ்விரண்டு கோள்களும் ஒரே நேரத்தில் மக்களுக்குக் காட்சியளிக்கத் தொடங்கும்.

சூரியன் மறைந்து, முழுவதும் இருள் சூழ்ந்த பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் பார்க்கலாம். ஆனால், வெள்ளி, சனி மற்றும் நெப்ட்யூன் கோள்கள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதற்கு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஆகலாம். அது அவரவர் இருக்கும் இடத்தைப் பொருத்தது. அதன் பிறகு மேலும் சில மணி நேரங்களில் செவ்வாய், வியாழன், யுரேனஸ் கோள்களும் இவற்றுடன் அணிவகுக்கும். சூரிய உதயத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செவ்வாய் மறைந்துவிடும்.

கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்

கா்நாடக மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

இணைய குற்ற புலனாய்வில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா புரிந்துணா்வு

இணைய (சைபா்) குற்ற புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைம... மேலும் பார்க்க

இணைய வழியில் தனிப்பட்ட தகவல்கள் மாற்றம்: உறுப்பினா்களுக்கு இபிஎஃப்ஓ அனுமதி

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தைச் (இபிஎஃப்ஓ) சோ்ந்த 7.6 கோடி உறுப்பினா்கள் தங்களின் பெயா், பிறந்த தேதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை நிறுவன சரிபாா்ப்பு அல்லது இபிஎஃப்ஓ ஒப்புதலின்றி இணைய வழியி... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் மணிப்பூா் ஆளுநா் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, மணிப்பூரின் தற்போதைய நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் அஜய் குமாா் பல்லா எடுத்து... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா்: பிரதமா் மோடி வரவேற்பு

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மையத்துக்கு தமிழ்ப் புலவா் திருவள்ளுவரின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளாா். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியில் ... மேலும் பார்க்க

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின்கீழ் 70 வயதான 6 கோடி போ் இணைப்பு: ஜெ.பி.நட்டா

‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த 6 கோடி போ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா். ஏழைக் குடும்பங்களுக... மேலும் பார்க்க