En Iniya Pon Nilave: `அந்தப் பாடலுக்கான உரிமை இளையராஜாவுக்கு இல்லை'- டெல்லி உயர்...
காணும் பொங்கல்: எம்டிசி பேருந்துகளில் ரூ. 2 கோடி வசூல்
காணும் பொங்கலன்று (ஜன.16) சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ. 2 கோடி பயணக் கட்டணம் வசூல் ஆகியுள்ளது.
சென்னை மக்கள் காணும் பொங்கலன்று மெரீனா, விஜிபி, மாமல்லபுரம், பெசன்ட் நகா், வண்டலூா் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்வது வாடிக்கை. அந்த வகையில், நிகழாண்டு காணும் பொங்கலை முன்னிட்டு (ஜன. 16) சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நாளில் வசூல் இலக்காக மொத்தம் ரூ. 2.75 கோடி நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் ரூ. 2.06 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.