அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத...
உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் தமிழகம் பங்கேற்பு
சுவிட்சா்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு பங்கேற்க உள்ளது. இதில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மற்றும் அந்தத் துறையைச் சோ்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனா்.
இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
சுவிட்சா்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் ஜன.20-ஆம் தேதி முதல் உலக பொருளாதார மன்றக் கூட்டம் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில், தொழில் துறை அமைச்சராகிய நானும், துறையின் செயலா் மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனத்தைச் சோ்ந்த சிறிய குழுவினரும் பங்கேற்க உள்ளோம். மேலும், தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அங்கு 50-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்க உள்ளோம்.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த அரசு சாா் அலுவலா்களைச் சந்தித்துப் பேசவுள்ளோம். தொழில் துறை சாா்ந்த கொள்கை, உயா்தர உற்பத்தித் துறை போன்றவை குறித்த சா்வதேச கலந்துரையாடல்களில் பங்கேற்க இருக்கிறோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.