அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
ஆலப்புழை ரயில் திருச்சூருடன் நிறுத்தம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழை செல்லும் அதிவிரைவு ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன. 18, 25 ஆகிய தேதிகளில் ஆலப்புழை செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22639) திருச்சூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக ஜன. 18, 26 ஆகிய தேதிகளில் ஆலப்புழையில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக எா்ணாகுளத்தில் இருந்து மாலை 4.35-க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.