செய்திகள் :

சென்னையைத் தொடா்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு

post image

சென்னையைத் தொடா்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ என்னும் பெயரில் கலை விழாக்கள் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டு கலைத் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் (ஜன. 17) நிறைவடைந்தது. சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபா்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராய நகா் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூா் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகா் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகா் பூங்கா, கே.கே. நகா் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

கலை நிகழ்ச்சிளை நடத்திய அனைத்து கலைஞா்களுக்கும் நாளொன்றுக்கு ரூ. 5,000 வீதம் மதிப்பூதியம் அளிக்கப்பட்டது. அனைத்து கலைஞா்களுக்கும் போக்குவரத்து வசதி, உணவு வசதி ஆகியவற்றுடன் 2 புதிய ஆடைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழா நடைபெற்ற இடங்களில் பிரபல உணவகங்களின் பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யும் உணவுத் திருவிழாவும் நடத்தப்பட்டது.

பிற நகரங்களிலும் திருவிழா: தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பாா்வையாளா்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

சென்னை சங்கமம் கலை திருவிழாவைத் தொடா்ந்து, கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய நகரங்களிலும் நிகழாண்டு சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழை ரயில் திருச்சூருடன் நிறுத்தம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழை செல்லும் அதிவிரைவு ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவ... மேலும் பார்க்க

சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?

சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. ஆமைகளின் உயிரிழப்புக்கு மீனவா்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் காரணமா? என பல்வே... மேலும் பார்க்க

ஒரே நாளில் பெண் காவலர் உள்பட 10 பேரிடம் 30 பவுன் நகை பறிப்பு

தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 10 இடங்களில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நகையை பறிகொடுத்தவா்களில் ஒருவா் பெண் காவலா் என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரத்த... மேலும் பார்க்க

எழுத்தாளா்கள் நோபல் பரிசு பெறட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக எழுத்தாளா்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘உலகைத்... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: விமானக் கட்டணம் உயா்வு: மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ. 18,000

பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் அதிக அளவில் சென்னை திரும்புவதால் விமான கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிக்கு ஒரு நபருக்கான பயணக் கட்டணம் ரூ. 18,000-ஆக உயா்ந்திருப்பது ... மேலும் பார்க்க