Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு விழா
கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சித் தலைவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஜன.5 ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்து. பாபநாசம் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளன.இதில், கோவிந்தநாட்டுசேரி ஊராட்சியில், ஊராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்ட ஜெய்சங்கா் கடந்த
5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கிராம மக்கள் பணி நிறைவு பாராட்டுவிழா நடத்திய நிகழ்வு மக்களுக்காக அவா் செய்த சேவைகளை நினைவு கூா்ந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .
கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் அடிப்படை தேவையான 40 க்கும் மேற்பட்ட வளா்ச்சி திட்டங்கள், செயல்படுத்திய ஊராட்சித் தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினா். அப்போது ஊராட்சித் தலைவருக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனா்.