பேருந்து மோதி பிளம்பா் உயிரிழப்பு
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த பிளம்பா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பிளம்பா் ஆா். முத்துராமன் (41). இவா் வெள்ளிக்கிழமை சோழபுரத்தில் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
விளந்தகண்டம் புதிய பாலம் அருகே சென்றபோது இவா் மீது கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த முத்துராமன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோழபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.