செய்திகள் :

``காதலிக்க பைக் வேண்டும்'' - நகையை திருடி டூவீலர் வாங்கிய வாலிபர்... தாய் உள்பட 3பேர் கைது!

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில், காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நகை திருடி, அதை அடகு வைத்த பணத்தில் விலையுயர்ந்த டூவீலர் வாங்கிய இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தாய் மற்றும் சித்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆண்டாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி (வயது 70). இவரின் மகன் கணேசன் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். தாயும்-மகனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறனர். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், முத்துலட்சுமி தன் கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 11 பவுன் எடை கொண்ட இரண்டு தங்க சங்கிலிகளை கழற்றி வீட்டில் உள்ள பீரோவில் பத்திரப்படுத்தியுள்ளார்.

காளிராஜ்

இதைத்தொடர்ந்து, கடந்த 15-ந் தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று கழுத்தில் நகை அணிவதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த இரண்டு தங்கச்சங்கிலிகளும் மாயமாகியிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி, நகை மாயமானது குறித்து தனது மகன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நகை திருட்டு விஷயம் குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் நகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைது

போலீஸின் தீவிர விசாரணையில் ஆண்டாள்புரம் பகுதி அருகே உள்ள மாயாண்டிபட்டி தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 19) என்பவர்தான் முத்துலட்சுமியின் வீட்டில் நகை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காளிராஜின்‌ நடமாட்டத்தை கணாகாணித்த போலீஸார், அவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, சம்பவத்தன்று முத்துலட்சுமியின் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட காளிராஜ், சுவர் ஏறிகுதித்தது உள்ளே நுழைந்துள்ளார். தொடர்ந்து, மின்சார மீட்டர்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த முத்துலட்சுமியின் வீட்டுச்சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்துள்ளார். பின்பு பீரோவில் இருந்த 11 பவுன் எடையுள்ள இரண்டு தங்க செயின்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

திருடிய நகைகளை, அவரின் தாய் பத்மாவதி (34), சித்தி ஆனந்தவல்லி (29) ஆகியோரின் சம்மதத்துடன் இரண்டு தனித்தனி நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்தநிலையில், தான் ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் பெண்ணின் கவனத்தை ஈர்பதற்காக நகை அடகுவைத்த பணத்தில் விலையுயர்ந்த டூவீலரை காளிராஜ் வாங்கியுள்ளார்.

கைது

அதைவைத்து, காதலியை பின் தொடர்வதும், அவரின் கவனத்தை திசைத்திருப்பும் நடவடிக்கைகளில் காளிராஜ் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் தான் போலீஸிடம் காளிராஜ் சிக்கிக் கொண்டார். இதையடுத்து காளிராஜ் உள்பட அவரின் தாய் பத்மாவதி, சித்தி ஆனந்தவல்லி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றனர்.

"ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு; காவல்துறைக்கு முழு சுதந்திரம் வேண்டும்" - அண்ணாமலை காட்டம்

சென்னையில் ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனவும், காவல்துறையும்... மேலும் பார்க்க

கரூர்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் காவலர் கைது; நடந்தது என்ன?

கரூர் நகரக் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 41). இவர், பணி நிமித்தமாக வெங்கமேடு காவல் நிலை... மேலும் பார்க்க

"போலீஸ் கண் முன்னாடியே வெட்டி கொன்னுட்டாங்களே..." - பெரம்பலூரை உலுக்கிய படுகொலை சம்பவம்

பெரம்​பலூர் மாவட்டம், வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​தவர் மணிகண்​டன்​ (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்​தவர் தேவேந்​திரன்​ (வயது 30). இருவரும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைத்... மேலும் பார்க்க

ரவுடியுடன் பொங்கல் விழா கொண்டாடிய 3 போலீஸார்... ஆயுதப்படைக்குத் தூக்கியடித்த திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி `சமத்துவ பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டது.இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, அஜித்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி உள்பட... மேலும் பார்க்க

வேலூர்: "குளிக்கிறப்ப வீடியோ கால் பண்ணு..." - மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

வேலூர் கொணவட்டம் மதினாநகரைச் சேர்ந்தவர் முகமது சானேகா (35). இவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் மாலை வீட்டுக்குச்... மேலும் பார்க்க

கியர்பாக்ஸ் முதல் டயர் வரை மாயம் - ஸ்டேஷன் பாதுகாப்பில் இருந்த விவசாயியின் பறிமுதல் வாகன பரிதாபம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் கோக்கால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். கடந்த 2020 - ம் ஆண்டு அந்த பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கும் தனியாருக்கு ... மேலும் பார்க்க