அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
ரயிலில் 31 மதுபாட்டில்கள் பறிமுதல்
கேரளம் செல்லும் ரயிலில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, காரைக்காலில் இருந்து எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் 1-ஆவது நடைமேடையில் வந்து நின்றது.
ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்றுக் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டு அந்த பைகளை பறிமுதல் செய்தனா்.
அதில், புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 31 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.