நாளைய மின்தடை: பட்டணம், கணியூா், காடுவெட்டிபாளையம்
கோவை பட்டணம், கணியூா், காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
பட்டணம் துணை மின் நிலையம்: பட்டணம்புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்தியநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா் (ஒரு பகுதி), பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.
கணியூா் துணை மின் நிலையம்: ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூா், ஷீபா நகா், கொள்ளுப்பாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் ஊத்துப்பாளையம்.
காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்: காடுவெட்டிபாளையம், என்.ஜி.பாளையம், மோளகாளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன்புதூா் (ஒரு பகுதி) மற்றும் வலையபாளையம் (ஒரு பகுதி).