மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.24 அடியில் இருந்து 112.94 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 129 கனஅடியிலிருந்து வினாடிக்கு 131 அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 82.65டிஎம்சியாக உள்ளது.