செய்திகள் :

``கலெக்டர் இருக்கையில் இன்பநிதியின் நண்பர்... தமிழகத்தின் சாபக்கேடு!'' - அண்ணாமலை காட்டம்

post image

மதுரையில் நடந்த தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம், பெருமை. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

அண்ணாமலை

`கலெக்டர் இருக்கையில் இன்பநிதியின் நண்பர்'

ஜல்லிக்கட்டு போட்டிக்கு துணை முதலமைச்சர் வருவதோ, அவரது மகனையும் கூட்டி வந்தததோ தவறு கிடையாது. மகனை முதல் இருக்கையில் அமர வைத்தது தவறுதான். பின்னாலுள்ள இருக்கையில் அமர வைத்திருக்கலாம். அதைவிட பெரிய தவறு, துணை முதல்வர் மகன் இன்பநிதியின் நண்பர்களை முதல் இருக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமைச்சர் மூர்த்தி செய்தது. என்னை எழுந்திரிக்க வற்புறுத்தவில்லை என்று கலெக்டர் கூறுகிறார். அப்புறம் எதற்கு இருக்கையை விட்டுக் கொடுத்தார்.

கலெக்டர் அமர்ந்திருந்த இருக்கையில் இன்பநிதியின் நண்பர் அமர்ந்திருக்கிறார். கலெக்டர் தன்னை தண்ணி இல்லாத காட்டிற்கு மாற்றி விடுவார்கள் என நினைக்கிறார்.

மாபெரும் தவறு...

மாவட்ட கலெக்டராக அவ்வளவு எளிதாக வர முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழுந்து விழுந்த படித்துதான் அந்த இடத்திற்கு வருகிறார்கள். ஒரு ஏழை எளிய மாணவர் படித்து வரவேண்டிய இடம் அது. நியாயமாக பார்த்தால் அமைச்சருக்கும் துணை முதல்வருக்கும் நடுவில் கலெக்டர் அமர்ந்திருக்க வேண்டும். அந்த இருக்கையை விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு.  கலெக்டரை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டார்கள். இப்படி இருந்தால் சாமானிய மக்களுக்கு இந்த கலெக்டரின் மீது எப்படி நம்பிக்கை வரும்? அமைச்சர் மூர்த்தி எழுந்திருக்க சொன்னால், கலெக்டர் செய்திருக்க கூடாது. வேண்டுமானால் மூர்த்தி அவர் இருக்கையை விட்டு கொடுக்கட்டும். ஏனென்றால், அவர் அரசியல்வாதி. ஆனால், கலெக்டர் நடந்த கொண்ட விதம் ஏற்புடையது அல்ல. வேறு இருக்கையில் உதயநிதியின் மகனை அமரச் சொல்லி இருக்க வேண்டும்.

அலங்காநல்லூர் | அண்ணாமலை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விஜய்யை அழைத்தது போல் அதே வேலையை செல்வபெருந்தகை செய்கிறார். பாஜகவிற்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை, இளைஞர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் நாங்கள் யாரையும் அழைக்க வேண்டி அவசியம் இல்லை.

திமுக பிறப்பதற்கு முனபே வள்ளுவர் திருக்குறளில் ஆன்மீக கருத்துக்களை சொல்லி உள்ளார். வள்ளுவன் ஆரிய கைக்கூலி என்று தந்தை பெரியார் சொல்லிவிட்டார். அப்புறம் வள்ளுவருக்கு காவிக்கொடி பூசினால் உங்களுக்கு என்ன பிரச்சனை? தமிழகத்திற்கு வலுவான தலைவர்கள் வரவேண்டும்.

திமுக தமிழகத்தில் இருப்பது சாபக்கேடாக பார்க்கிறேன். அப்பாவின் அடையாளத்தை வைத்து மூன்றாவது முறையாக வர வேண்டும் என்று நினைத்தால் அது சாபக்கேடு. ஏற்கெனவே ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம். தற்போது நடைபெற உள்ளது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். திருப்பரங்குன்றத்திற்கு சிக்கந்தர் மலை என பெயர் வைத்து ஆட்டை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். திமுகவை பொருத்தவரை பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவார்கள். ஆறுபடை வீடுகளில் முக்கிய வீடாக திருப்பரங்குன்றம் உள்ளது என்பது சரித்திரத்தை பார்த்தால் தெரியும்" என்றார்.

``தமிழ் மொழி, கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி..'' - ஆளுநர் ரவி

2015-ம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் 11 மில்லியன் டாலர் மதிப்பில்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்!

சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு கொடூரத்தை எதிர்த்து சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு 8 கேள்விகள் கேட்டு விவாதத்தைக் கிளப்பியிருந்தார் சத்யராஜின் மகள் திவ்யா. தனது ‘மகிழ்மதி’ இயக... மேலும் பார்க்க

Gaza - Israel: ``மீண்டும் போர் தொடங்கும் உரிமை இருக்கிறது.." - இஸ்ரேல் பிரதமர் சொல்வதென்ன?

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுடன், 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிந்தும், லட்சக்கணக்காணவர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும், ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் எடையைக் கூட்டுமா மலச்சிக்கல் பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 35. என் உடல் எடையில் அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் இருப்பதை உணர்கிறேன். எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் ... மேலும் பார்க்க

Trump: ``சீனா அதிபருடன் போனில் பேசினேன்; நாங்கள் இருவரும் சேர்ந்து...'' -டிரம்ப் சொல்வதென்ன?

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், முன்னர் பேசுகையில், சீன இறக்குமதி பொருள்களுக்கு கிட்டதட்ட 60 சதவிகித வரி விதிக்க... மேலும் பார்க்க

``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம்

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. அதோடு பல சர்ச்சைகளும் எழுந்தது. ஜாதிய ரீதியாக தன்னை மாடுபிடிக்க அனுமதிக்கவில்லை எனவ... மேலும் பார்க்க