செய்திகள் :

இவர் முக்கிய வீரராக இருந்திருப்பார்; அணியில் இடம்பெறாத வீரர் குறித்து சுரேஷ் ரெய்னா!

post image

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாத வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (ஜனவரி 18) அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு, இளம் வீரர் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

இதையும் படிக்க: அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

முக்கியமான வீரர்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சூர்யகுமார் யாதவ் அதிகம் மிஸ் செய்யப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சூர்யகுமார் யாதவ்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தார். அவர் மைதானத்தில் அனைத்துப் புறங்களிலும் ஸ்கோர் செய்யும் திறன் கொண்டவர். ஆட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் அவரால் ஓவருக்கு 9 ரன்கள் அடிக்க முடியும். அவரது அதிரடியான பேட்டிங்கால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது அணியில் ஃபார்மில் இல்லாத முதல் 3 பேரின் மீது பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளது. சூர்யகுமார் எந்த ஒரு இடத்திலும் களமிறங்கி நன்றாக விளையாடக் கூடியவர் என்றார்.

இதையும் படிக்க: ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!

முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ... மேலும் பார்க்க

ஐசிசி டி20 உலகக் கோப்பை: அபார வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஜனவரி 18) மலேசியாவி... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார்.ரஞ்சி கோப்பையில் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி சௌராஷ்டிரம் தில்லிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது. இந்... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ... மேலும் பார்க்க

விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன்!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் சாம்பியன் பட்டம் வென்றது.விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. விதர்... மேலும் பார்க்க

137 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 17) முல்தானில் தொடங... மேலும் பார்க்க