நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
பயணிகளை வைத்துக்கொண்டே விபரீத மோதல் - அத்துமீறிய கோவை தனியார் பேருந்துகள்
கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் ஏராளமான தனியார் பேருந்துகள் உள்ளன. தொழில் போட்டியில் அவர்கள் அதிவேகமாக செல்வதுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதும் வழக்கம்.
பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேருந்துகள் இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கலைமகள் என்ற தனியார் பேருந்து மற்றும் ஜெய் என்ற தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே புறப்படும் நேரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே ஜெய் பேருந்து ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு நிமிடத்துக்கு முன்பாகவே பயணிகளை ஏற்றி புறப்பட்டது. கோபமடைந்த கலைமகள் பேருந்து, ஜெய் பேருந்தை முந்திச் சென்றது. மலுமிச்சம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கலைமகள் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
அப்போது ஜெய் பேருந்து ஓட்டுநர் குமார் மற்றும் நடத்துனர் மணிகண்டன் அவர்களை முந்திச் சென்று நிறுத்தி கலைமகள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்கியுள்ளனர். பயணிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பிரித்துவிட்டனர்.
தொடர்ந்து இரண்டு ஓட்டுநர்களும் அவரவர் பேருந்தில் ஏறிப் பேருந்தை எடுத்தனர். திடீரென ஜெய் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரின் உதவியுடன் ரிவர்ஸில் வந்து கலைமகள் பேருந்து மீது மோதினார். இதனால் மக்கள் பயந்தனர். பயணிகள் இருக்கும்போதே அவர்களின் பாதுகாப்பைப் பற்றி யோசிக்காமல் பேருந்தை வைத்து மோதுகின்றனர் என்று மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து கலைமகள் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரில், செட்டிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.