செய்திகள் :

``தமிழ் மொழி, கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி..'' - ஆளுநர் ரவி

post image

2015-ம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாசார மையம் அமைக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிந்து, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிலையில், அந்தக் கலாசார மையத்துக்கு `திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயரிடப்பட்டுள்ளது.

Thiruvalluvar Cultural Center

இதை வரவேற்று பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு முக்கியச் சான்றாக விளங்குகிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்திய உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கலாச்சார மையத்துக்கு "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என்று மறுபெயரிடப்பட்டிருப்பது, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரிக தொடர்பைக் காட்டுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்!

சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு கொடூரத்தை எதிர்த்து சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு 8 கேள்விகள் கேட்டு விவாதத்தைக் கிளப்பியிருந்தார் சத்யராஜின் மகள் திவ்யா. தனது ‘மகிழ்மதி’ இயக... மேலும் பார்க்க

``கலெக்டர் இருக்கையில் இன்பநிதியின் நண்பர்... தமிழகத்தின் சாபக்கேடு!'' - அண்ணாமலை காட்டம்

மதுரையில் நடந்த தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம், பெருமை. அடுத்த ஆ... மேலும் பார்க்க

Gaza - Israel: ``மீண்டும் போர் தொடங்கும் உரிமை இருக்கிறது.." - இஸ்ரேல் பிரதமர் சொல்வதென்ன?

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுடன், 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிந்தும், லட்சக்கணக்காணவர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும், ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் எடையைக் கூட்டுமா மலச்சிக்கல் பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 35. என் உடல் எடையில் அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் இருப்பதை உணர்கிறேன். எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் ... மேலும் பார்க்க

Trump: ``சீனா அதிபருடன் போனில் பேசினேன்; நாங்கள் இருவரும் சேர்ந்து...'' -டிரம்ப் சொல்வதென்ன?

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், முன்னர் பேசுகையில், சீன இறக்குமதி பொருள்களுக்கு கிட்டதட்ட 60 சதவிகித வரி விதிக்க... மேலும் பார்க்க

``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம்

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. அதோடு பல சர்ச்சைகளும் எழுந்தது. ஜாதிய ரீதியாக தன்னை மாடுபிடிக்க அனுமதிக்கவில்லை எனவ... மேலும் பார்க்க