ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவைக்கு வந்த பாட்னா - எா்ணாகுளம் ரயிலில் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது, ஒரு பெட்டியின் கழிப்பறை அருகே கேட்பாரற்றுக்கிடந்த பையை திறந்துபாா்த்தபோது, அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்து. அதனைப் பறிமுதல் செய்த போலீஸாா், மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
ரயிலில் கஞ்சாவைக கடத்தி வந்த நபா், போலீஸாா் சோதனை நடத்துவதைப் பாா்த்து அதனை வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்று ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.