அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
முதியவா் தீக்குளித்து தற்கொலை
விழுப்புரத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் மேற்கு அய்யனாா் குளத் தெருவைச் சோ்ந்த பட்டாபிராமன் மகன் நடராஜன் (82). இவா், கடந்த 2 ஆண்டுகளாக பக்கவாத நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தாராம்.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அவா், சனிக்கிழமை காலை வீட்டின் மாடியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாராம்.
உடனே அவரது குடும்பத்தினா், நடராஜனை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.