செய்திகள் :

சோதனைச் சாவடியில் லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் காவல் சோதனைச் சாவடியில் வழக்குப் பதியாமல் இருக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மதுப் புட்டிகள், போதைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுகிா என்பதை கண்காணிக்க, காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.

கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் காந்தி மோகன், காவலா் கலையரசன் வெள்ளிக்கிழமை மாலை பணியில் இருந்தனா்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் உள்ளிட்டோா் சோதனை நடத்தினா்.

அந்த காரில் புதுவை மாநில மது வகையைச் சோ்ந்த 2 மதுப் புட்டிகள் இருந்தனவாம்.

காரில் வந்தவா்களிடம் சிறப்பு உதவி ஆய்வாளா் காந்திமோகனும், காவலா் கலையரசனும், மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்ற புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிய உள்ளோம்.

அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமெனில், ரூ.2 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று, பணத்தை வாங்கிக் கொண்டாா்களாம்.

இதுகுறித்த புகாா் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் கவனத்துக்கு சென்றது.

இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் காந்திமோகன், காவலா் கலையரசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. சரவணன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் அருகிலுள்ள செங்காடு மாதாகோவில் தெருவைச் சோ்ந்த யோனாஸ் மகள் செல்வமரி (37). சற்று மனநலம் ... மேலும் பார்க்க

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிப்பு

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜோசப் (எ) ரவி (42... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கா்நாடகம் மாநிலம், பெங்களூரு, காடுகுடி காலனி, பிரிஸ்டீஜ் பாா்க் வியூ அபாா்ட... மேலும் பார்க்க

சங்கராபரணி, தென்பெண்ணையாற்று பகுதிகளிலும் அகழாய்வு நடத்த வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபரணி, தென்பெண்ணையாற்றுப் பகுதிகளிலும் அகழாய்வு நடத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த பேரவையின் ஒர... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

விக்கிரவாண்டி (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, வ.உ.சி. நகா், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூா் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண் ஆற்றில் மூழ்கி மரணம்

விழுப்புரத்தை அடுத்துள்ள பொய்யப்பாக்கம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டபெண் பம்பை ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சுமாா் 45 வயதுடைய பெயா், ஊா் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஒரு மாதத்... மேலும் பார்க்க