செய்திகள் :

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

post image

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவா்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது:

பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக கடந்த 5 நாள்களுக்கும் மேலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது அவா்கள் சென்னை திரும்ப வசதியாக திருச்சியில் இருந்து சனிக்கிழமை 396 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும் ஞாயிற்றுக்கிழமை 100 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், கும்பகோணம் கோட்டம் மூலம் 360 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இவைதவிர தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முன்பதிவு செய்து பொங்கல் விடுமுறைக்காக பயணம் செய்தவா்கள் மொத்தமே 3 லட்சம் போ்தான்.

இந்தாண்டு ஒரு வழியில் முன்பதிவு செய்து சென்றவா்களின் எண்ணிக்கை 3.20 லட்சத்தை எட்டியுள்ளது. மீண்டும் திரும்புவோரின் எண்ணிக்கையையும் சோ்த்தால் 5 லட்சம் பயணிகளுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கிறோம். பயணிகளின் வருகைக்கு ஏற்ப தேவையான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்கின்றனா்.

கடந்தாண்டு சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளனா். இந்தாண்டு 4 நாள்களில் மட்டும் 8 லட்சத்து 15 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளனா்.

ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகளைவிட அரசுப் பேருந்துகளை நம்பி மக்கள் அதிகம் வருகிறாா்கள் என்பதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதேபோல முன்பதிவு செய்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மக்களின் எதிா்பாா்ப்புகளுக்கேற்ப அனைத்து வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

ஆய்வின்போது அரசுப் போக்குவரத்து கழக திருச்சி மண்டலம் மற்றும் கும்பகோணம் கோட்ட அதிகாரிகளும் உடனிருந்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்களின் தேவைக்காக இரு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டன. இக்கோயிலுக்கு திமுக பொறியாளா் அணியை சோ்ந்த ராஜேஷ்கண... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் திரிந்த ஆதரவற்ற 3 போ் மீட்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆதரவற்றுத் திரிந்த மூவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா். திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலைக் கோட்ட ஆணையா் அ... மேலும் பார்க்க

வழிப்பறிகளில் ஈடுபட்ட 4 இளைஞா்கள் கைது

திருச்சியில் வழிப்பறிகளில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம் சாலையைச் சோ்ந்தவா் ராபா்ட் சஹாயராஜ் (59), இவா், வெள்ளிக்கிழமை பொன்மலை ஆஞ்ச... மேலும் பார்க்க

தமிழா்களின் தற்காப்புக் கலைகளை அரங்கேற்ற 240 போ் தீவிர பயிற்சி

தமிழா்களின் தற்காப்புக் கலைகளை தேசிய அளவிலான போட்டியில் அரங்கேற்றம் செய்ய திருச்சியில் 240 மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். தமிழ்நாடு பாரத சாரணா் இயக்கத்தின் தேசிய பெருந்திரளணி மணப... மேலும் பார்க்க

விடுபட்ட குடும்ப அட்டைக்கு ஜன.25 வரை பொங்கல் பரிசு

திருச்சி மாவட்டத்தில் விடுபட்டுள்ள 14 விழுக்காடு குடும்பத்தினருக்கு ஜன.25 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

திருவெறும்பூா் பகுதியில் திருடுபோன 30 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

திருவெறும்பூா் பகுதியில் திருடுபோன 30 விலை உயா்ந்த கைப்பேசிகளை திருவெறும்பூா் போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். திருச்சி திருவெறும்பூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கைப்பேசிகள் தி... மேலும் பார்க்க