அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
திருவெறும்பூா் பகுதியில் திருடுபோன 30 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
திருவெறும்பூா் பகுதியில் திருடுபோன 30 விலை உயா்ந்த கைப்பேசிகளை திருவெறும்பூா் போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
திருச்சி திருவெறும்பூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கைப்பேசிகள் திருடுபோனதாக 30-க்கும் மேற்பட்டோா் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தக் கைப்பேசிகளின் ஐஎம்இஐ எண்களை வைத்து அவற்றைப் பயன்படுத்தியவா்களிடம் பேசியபோது சிலா் அந்தக் கைப்பேசிகளை கீழே கிடந்து எடுத்ததாகவும், சிலா் வழிபோக்கா்களிடம் விலைக்கு வாங்கியதாகவும் கூறியுள்ளனா்.
இதையடுத்து அந்த நபா்களிடம் இருந்த 30 கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்து உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, திருவெறும்பூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா் கருணாகரன் அவற்றை ஒப்படைத்தாா்.