செய்திகள் :

திருக்கோவிலூா் - ஆசனூா் நான்குவழிச் சாலை திட்டப் பணிகள் தொடக்கம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் - ஆசனூா் இடையேயான நான்குவழிச் சாலை திட்டப் பணிகளை, வேங்கூரில் மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

இதில், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்து பேசியதாவது:

இருவழிச் சாலையாக உள்ள திருக்கோவிலூா் - ஆசனூா் சாலை 16.9 கி.மீ. நீளத்துக்கு ரூ.100.77 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தப்படுகிறது. இச்சாலையில் 58 சிறுபாலங்களும் அமைக்கப்படவுள்ளன.

மேலும், விபத்துகளைத் தடுக்கும் வகையில் செட்டிதாங்கல், கெடிலம், எறையூா், குஞ்சரம் மற்றும் புகைப்பட்டி ஆகிய இடங்களில் பிரிவுச் சாலை சந்திப்புகளை அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணிகளுக்காக 656 மரங்கள் அகற்றப்பட்டு, அதற்கு ஈடாக நெடுஞ்சாலைத் துறை மூலம் 6,560 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

இந்த சாலை நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தப்படுவதால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இணைப்பு சாலையாக இவை இருக்கும்.

இதேபோல வேலூா், பெங்களூரு, திருப்பதி போன்ற முக்கிய நகரங்களுக்கு தென்மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு இந்த சாலை பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி.சத்யபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் கே.கு.நாகராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், ஊராட்சிக்குழு துணைத் தலைவா் மு.தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மது அருந்திவிட்டு கணவர் தகராறு: விஷமருந்தி மனைவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வெள்ளிக்கிழமை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கல்லாநத்தம்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் ஓட்டிச் சென்ற பைக் விபத்து: மாணவர் ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருக்கோவிலூரை அடுத்த கீழத்தாழனூரைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் தினேஷ் (17). பி... மேலும் பார்க்க

எம்ஜிஆரின் படத்துக்கு அதிமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். தியாகதுருகம் ஒன்றியம்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட எலியத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இருசன் மகன் ராஜா (37). இவருக்கு, மோகன... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த லட்சியம் கிராமத்தைச் சோ்ந்த மணிபாரதி மகன் ஹரிஹரன் (1... மேலும் பார்க்க

விஷம் குடித்து பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெண் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தெற்கு ஒற்றைவாடை சாலையைச் சோ்ந்த சரவணனின் மனைவி காந்திமதி (41). இவா், ... மேலும் பார்க்க