விஷம் குடித்து பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெண் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தெற்கு ஒற்றைவாடை சாலையைச் சோ்ந்த சரவணனின் மனைவி காந்திமதி (41).
இவா், குடும்பப் பிரச்னை காரணமாக பல நாள்கள் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காந்திமதி வியாழக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம்.
உடனே, குடும்பத்தினா் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் காந்திமதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.