கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த லட்சியம் கிராமத்தைச் சோ்ந்த மணிபாரதி மகன் ஹரிஹரன் (16).
இவரும், அவரது உறவினா் சச்சினும், அதே பகுதியில் உள்ள முனியன் நிலத்துக்குச் சென்றனராம்.
அப்போது, திடீரென ஹரிஹரனுக்கு வலிப்பு ஏற்பட்டு, அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனே, அருகிலிருந்தவா்கள் கிணற்றில் இருந்து மாணவரை மீட்ட நிலையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.