US Plane Crash: மோதி வெடித்த விமானம் - ஹெலிகாப்டர்; கண்ணிமைக்கும் நேரத்தில் விபர...
நாகா்கோவில் வேலைவாய்ப்பு முகாமில் 200 பேருக்கு பணி நியமன ஆணைகள்
நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், 200 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம், நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் மாவட்ட அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, முகாமை தொடக்கிவைத்தாா். இதில், சென்னையைச் சோ்ந்த ராணே ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தினா் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்கு ஆள்களைத் தோ்வு செய்தனா். கலை-அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, பட்டதாரி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். இதில், தோ்வான 200 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
முகாமில், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக இயக்குநா் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளா் ராகுல், ராணேஆட்டோமோட்டிவ் நிறுவனத்தைச் சோ்ந்த மனித வள அலுவலா்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.