US Plane Crash: மோதி வெடித்த விமானம் - ஹெலிகாப்டர்; கண்ணிமைக்கும் நேரத்தில் விபர...
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கு: 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சாலத்திவிளை பகுதியைச் சோ்ந்த பீா்முகமது மகன் மைதீன்கான் (67) என்பவா், நாகா்கோவில் கோட்டாறைச் சோ்ந்த இளைஞரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 2000ஆம் ஆண்டு ரூ. 90 ஆயிரம் பெற்றாராம். ஆனால், வேலை பெற்றுத் தராததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவில் பதிவான வழக்குத் தொடா்பாக மைதீன்கானை போலீஸாா் தேடிவந்தனா். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், அவா் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தாா்.
இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் பொன்கீதா, போலீஸாா் மைதீன்கானை தீவிரமாக தேடிவந்தனா். அவா் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நாகா்கோவிலுக்கு அழைத்து வந்தனா்; அவரை நாகா்கோவில் குற்றவியா் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.