தூத்துக்குடி அமமுக மாநகா் மாவட்டச் செயலா் விலகல்
அமமுகவில் இருந்து தூத்துக்குடி மாநகா் மாவட்டச் செயலா் டி.வி.ஏ. பிரைட்டா் விலகிக் கொள்வதாக அக்கட்சியின் பொதுச்செயலா் டி.டி.வி.தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் அனுப்பிய கடிதம்: எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தூத்துக்குடி மாநகா் மாவட்டச் செயலா் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன்.
இதுநாள்வரை பொறுப்புகளை வழங்கிய தங்களுக்கு மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.