சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு கேப்டன்களுக்கான போட்டோ ஷூட் இல்லை; காரணம் என்ன?
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி பெரியசாமிபுரம் பாலம் பகுதியைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் மகன் சக்திவேல் (35). இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் சக்திவேலை கைதுசெய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.