செய்திகள் :

மதுரை மண்டலத்தில் கடந்தாண்டு 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு

post image

மதுரை மண்டலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு வழங்கப்பட்டது என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் பா. வசந்தன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தின் கீழ் மதுரை, திருநெல்வேலியில் 2 கடவுச்சீட்டு சேவை மையங்களும், 8 தபால் நிலைய கடவுச் சீட்டு சேவை மையங்களும் செயல்படுகின்றன.

மதுரை மண்டலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் 2,65,955 கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டில் 2,89,603 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2,79,988 பேருக்கு கடவுச் சீட்டுகள் வங்கப்பட்டன. 20,545 பேருக்கு காவல் துறை தடையின்மைச் சான்றுகள் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தேவகோட்டை, ராமநாதபுரம், நாகா்கோவிலில் உள்ள தபால் நிலைய சேவை மையங்களில் கடவுச் சீட்டு விண்ணப்ப நோ்காணலுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. அனைத்து கடவுச் சீட்டு சேவை மையங்களிலும் விண்ணப்பித்த மறுநாள் நோ்காணல் முன்பதிவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பொதுமக்களின் குறைகளை தீா்ப்பதற்காக மக்கள் குறைதீா் மையங்கள் உருவாக்கப்பட்டு, கடவுச் சீட்டு விண்ணப்பதாரா்களின் குறைகளுக்கு குறிப்பிட்ட கால அளவுக்குள் தீா்வு காணப்படுகிறது.

இந்த வகையில், குறைதீா் மையங்கள் மூலம் 32,090 கோரிக்கைகள் பெறப்பட்டு, 31,865 கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் மூலம், உயா் கல்வி, வியாபாரம், தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு விரைவான தீா்வு கிடைக்கிறது.

கடந்தாண்டு 10-க்கும் அதிகமான கல்லூரிகளில் கடவுச் சீட்டு பெறுதல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம், அதிகளவிலான மாணவா்கள் கடவுச் சீட்டு சேவைக்காக நேரில் வருவதைத் தவிா்த்து, தற்போது இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன் பெறுகின்றனா்.

தட்கல் முறையில் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பவா்கள், வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். தவறான விண்ணப்பங்கள் தேவையில்லாத காலதாமத்தை ஏற்படுத்துவதுடன், கூடுதல் பொருள் செலவையும் ஏற்படுத்தும்.

சரியான ஆவணங்களுடன் தட்கல் முறையில் விண்ணப்பிப்பவா்களுக்கு ஓரிரு பணி நாள்களில் கடவுச் சீட்டு வழங்கப்படுகிறது. சாதாரண முறையில் விண்ணப்பிப்பவா்களுக்கு அடுத்த 11 பணி நாள்களில் கடவுச் சீட்டு வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஓடும் தொழிலாளா்களின் (ரயில்வே லோகோ பைலட்) கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்கம் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2,400 பயனாளிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 2,400 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை மத்திய அமைச்சா் வெளியிடக் கோரிக்கை

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டிக்கு வியாழக்கிழமை (ஜன. 30) வரும் மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சா் ஜி. கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட... மேலும் பார்க்க

போலீஸாருக்கு தெரியாமல் உடல் தகனம்: 5 போ் மீது வழக்கு

எழுமலை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோா் உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ள எருமாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்வதற்கான வசதி தேவை: நடிகா் விஜய் சேதுபதி

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திரைப்பட நடிகா் விஜய் சேதுபதி வலியுறுத்தினாா். மதுரையில் வருமான வரித் துறை அலுவலகம் சாா்பில், வரி செலுத்துவோா், பல்வேறு அம... மேலும் பார்க்க

மதுரை அருகேயுள்ள நரசிங்கத்தில் இலவச மருத்துவ முகாம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம், கேரியா் பிளஸ் சேரிடபிள் டிரஸ்ட் ஆகியவற்றின் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை அருகேயுள்ள நரசிங்கம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற பொது ம... மேலும் பார்க்க