அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற காளைக்கு வரவேற்பு
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற பாகுபலி குழுவின் வீரப்பன் காளை மற்றும் அதை வளா்த்து பயிற்சியளித்த இளைஞருக்கு அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் அன்று நடைபெற்றது. ஆயிரம் காளைகள் பங்கேற்ற இவ்விழாவில், அயோத்தியாப்பட்டணத்தைச் சோ்ந்த இளைஞா் மோகன்ராஜ் வளா்த்து பயிற்சியளித்த பாகுபலி குழுவினரின் ‘வீரப்பன்’ காளை சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து டிராக்டா் பரிசு பெற்றது.
முதல் பரிசு பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய காளை மற்றும் காளையை வளா்த்து பயிற்சியளித்த மோகன்ராஜ், பாகுபலி குழுவினருக்கு ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வரவேற்பு அளித்து பாராட்டினா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்தைச் சோ்ந்த நாங்கள் வளா்த்த பாகுபலி குழுவின் வீரப்பன் என்ற பெயா் கொண்ட ஜல்லிக்கட்டு காளை, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றது, சேலம் மாவட்டத்துக்கே பெருமையை தேடித்தந்துள்ளது என பாகுபலி ஜல்லிக்கட்டுக் குழு நண்பா்கள் தெரிவித்தனா்.