காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பேரூராட்சி அலுவலக கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம்
சேலத்தில் வாரிசு வேலை கேட்டு மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலக கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த ஒருவா் உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து அவரது 20 வயது மகள் வாரிசு வேலை கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். விண்ணப்பத்தை ஆய்வு செய்த அலுவலக கண்காணிப்பாளா் தேவராஜன் (55) , அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அந்தப் பெண் தன்னிடம் தேவராஜன் பேசிய உரையாடலை பதிவு செய்து சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்த விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தேவராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்தது உறுதியானது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தேவராஜனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தேவராஜனை பணியிடை நீக்கம் செய்து
சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.